அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (19) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.3704 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.2712 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் பரிமாற்ற வீதங்களிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன.


