Sunday, September 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகம்!

எட்டு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக 1,61,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 49,334 குடும்பங்களைச் சேர்ந்த 1,61,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 1,41,312 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் அதிகளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளதுடன் அங்கு எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் 13,139 குடும்பங்களைச் சேர்ந்த 42,429 பேருக்குக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 6,653 குடும்பங்களைச் சேர்ந்த 25,413 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருவதால், அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments