“திரிஷ்யம்” இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் “சண்டக்காரி”. மலையாளத்தில் திலீப், மம்தா மோகன்தாஸ் நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2012ல் வெளியான “மை பாஸ்” படத்தின் ரீமேக்காக “சண்டக்காரி” திரைப்படம் உருவாகியுள்ளது. ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. விமல் நாயகனாகவும், ஸ்ரேயா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர்.விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். புன்னகை பூ கீதா இப்படத்தை தயாரித்துள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ளார். 2019ம் ஆண்டே தயாரான இப்படம் தற்போது 7 ஆண்டுக்கு பிறகு செப்.,18ம் தேதி ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.


