Sunday, September 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பலாலியில் கிணற்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

பலாலியில் கிணற்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிணற்றுக்குள் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments