Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா? – சீமான் விளக்கம்

நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பா? – சீமான் விளக்கம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: சந்தித்தால் சந்திதேன் என்று சொல்லப்போகிறேன். எனக்கு என்ன பயமா? என்ன தயக்கமா? நீங்களா சந்தித்தாரா? சந்தித்து இருப்பாரா? என்று சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி? ரஜினி என்ன பா.ஜ.க.வா? நான் அவரை அன்பின் நிமித்தமாக, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று சொல்லி விட்டேன். ஒவ்வொன்றையும் நீங்களாக கற்பனை செய்து கொள்கிறீர்கள். நேற்று நீங்கள் தான் சொன்னீர்கள். வேதாரண்யத்தில் வேட்பாளரை அறிவித்ததாக சொன்னீர்கள். நான் தனித்து போட்டியிட போகிறேன் என்று தெரியும். கூட்டணி வைப்பவன் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments