Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்நானி படத்தில் இணைந்த கில் படத்தின் வில்லன் நடிகர்!

நானி படத்தில் இணைந்த கில் படத்தின் வில்லன் நடிகர்!

தசரா’ பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் ‘தி பாரடைஸ்’ என்ற படத்தில் நானி நடித்து வருகிறார். ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இந்த படத்தில் நானி உடன் இணைந்து நடித்து வருபவர்கள் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாக படக்குழு வைத்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக ‘கில்’ படத்தில் நடித்து பிரபலமான ராகவ் ஜூயல் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இவர் ‘கில்’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படமாக ‘தி பாரடைஸ்’ அமைந்திருக்கிறது. அவரது படப்பிடிப்பு காட்சிகள் விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது ‘தி பாரடைஸ்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் நானி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments