Tuesday, November 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் 07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

நாட்டில் 07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட மழையால் 07 மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் தெற்கு சப்ரகமுவ ஊவா வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இவ்வாறு டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

130 பிரதேச செயலகப் பிரிவுகளில் டொங்கு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 13 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை சுமார் ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்து ஐந்நூற்று ஐம்பது (105,550) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் டெங்கு நோயினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 79 ஆக பதிவாகியுள்ளது.

டெங்கு பரவுவதைத் தடுப்பதற்காக நுளம்புகள் பெருகும் சூழலை உடனடியாக அழித்தொழிக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.

குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் பாடசாலைகள் சமயத் தலங்கள் உள்ளிட்ட வளாகங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலை வளாகங்கள் பலவற்றிலிருந்து அதிகளவிலான டெங்கு குடம்பிககள் கண்டுபிடிக்கப்பட்டன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments