Thursday, September 24, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தியாக தீபம் திலீபனுக்கு சபையில் ரவிகரன் எம்.பி. அஞ்சலி

தியாக தீபம் திலீபனுக்கு சபையில் ரவிகரன் எம்.பி. அஞ்சலி

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினார்.

39ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (24) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் திலீபனை நினைவுகூர்ந்தார்.

திலீபன் முன்வைத்த ஐந்தம்சக் கோரிக்கைகளை நினைவுகூர்ந்த ரவிகரன், கடந்த கால காயங்கள் ஆற்றப்படாமல் நாட்டில் நல்லிணக்கம் சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், வடக்கு – கிழக்கில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை நினைவுகூர்ந்து, அவருக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துவதாக ரவிகரன் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments