இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் 30 முதல் 35 பயணிகளுடன் பயணித்த பேருந்தில் திடீரென தீ பரவியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நொய்டா–ஆக்ரா வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் எரியும் வாசனை வந்ததாக பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்த போதிலும், அவர் பேருந்தை நிறுத்தவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் தீப்பற்றியதுடன், பேருந்து முழுவதும் வேகமாக தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அடர்ந்த புகைக்கு மத்தியில் வெளியேற போராடியுள்ளனர்.
சில பயணிகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், சிலர் பேருந்திலிருந்து குதித்தும் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, பயணிகளின் புகாரின் அடிப்படையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


