Tuesday, June 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ETC சேவை

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ETC சேவை

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணங்களை பணம், அட்டைகள் அல்லது ETC (Electronic Toll Collection) ஊடாக செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ETC வசதியைப் பயன்படுத்துபவர்களுக்காக பிரத்தியேகமான நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், எவ்வித தாமதமுமின்றி பயணிக்க முடியும்.
அத்துடன், ETC பயனாளர்களுக்கு ஒவ்வொரு பயணத்திற்கும் 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
தற்போது பேலியகொட, கெரவலப்பிட்டிய, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க ஆகிய பரிமாற்ற நிலையங்களில் ETC ஊடாக கட்டணம் செலுத்த முடியும் என்பதுடன், எதிர்காலத்தில் கடவத்தையிலிருந்து வெளிவட்ட வீதி ஊடாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக கடவத்தை இடைப்பரிமாற்ற நிலையத்திலும் இந்த வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன www.exway.rda.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக மிகவும் இலகுவாக ETC இற்கு பதிவு செய்வதற்கான வசதிகளை செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments