Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது

கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது

கொழும்பு, ஹேவ்லாக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் பெண்ணொருவர் ரி – 56 ரக துப்பாக்கியை கொண்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள தனது வீட்டுக்கு பெண்ணொருவர் ரி-56 ரக தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளார்.

இவர் துப்பாக்கியை வாகனத்தில் இருந்து எடுப்பதை அவதானித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸார் குறித்த வீட்டை பரிசோதனை செய்து பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது, பை ஒன்றில் இருந்த ரி-56 துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கியை வைத்திருந்த பெண் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்கள் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments