கனடாவில் இந்த வார இறுதியில் ஹாலோவீன் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் சிறுவர்கள் மத்தியில், பிரபலமான கதாபாத்திரங்களின் ஆடைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, ஹாலிஃபாக்ஸில் (Halifax) அமைந்துள்ள The Glow Halloween Store உள்ளிட்ட ஆடை விற்பனை நிலையங்களில், இவ்வாண்டு பிரபலமான ஹாலோவீன் ஆடைகளை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறித்த கடையின் மேற்பார்வையாளர் மெலிசா லாண்ட்ரி (Melissa Landry) தெரிவிக்கையில், நூற்றுக்கணக்கான ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இம்முறை மூன்று வகையான கதாபாத்திர ஆடைகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, புதிய திரைப்படம் வெளியானதன் காரணமாக Toy Story கதாபாத்திர ஆடைகளும், திரைப்படத்தின் 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் Harry Potter கதாபாத்திர ஆடைகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.
அத்துடன், புதிய திரைப்படம் வெளியாகவுள்ளதன் காரணமாக Super Mario கதாபாத்திர ஆடைகளுக்கும் அதிக கேள்வி நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஹாலோவீன் கொண்டாட்டத்திற்கு முந்தைய இறுதி நாட்களிலேயே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆடைகளை வாங்க வருவதாகவும், இதனால் தற்போது கடையில் வாடிக்கையாளர்களின் வருகை மணித்தியாலத்திற்கு மணித்தியாலம் அதிகரித்து வருவதாகவும் மெலிசா லாண்ட்ரி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


