Thursday, October 29, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவை குறிக்க ‘இணை உறுப்பினர்’ சொல் நீக்கம்

கனடாவை குறிக்க ‘இணை உறுப்பினர்’ சொல் நீக்கம்

கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) “இணை உறுப்பினராக” (associate member) மாற்றும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்குப் பதிலாக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான புதிய சொற்றொடர்கள் கூட்டு அறிக்கையில் பயன்படுத்தப்படவுள்ளன.

மொன்றியலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 21 ஆவது கனடா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது, இது குறித்த உத்தியோகபூர்வ கூட்டு அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இந்த அறிக்கையின் வரைவுப் பிரதியை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள தகவல்களின்படி, கனடாவைக் குறிப்பதற்கு “இணை உறுப்பினர்” என்ற சொல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘மிக நெருக்கமான பிணைப்பு’ (ever closer association) என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த மாதம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen), கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது “இணை உறுப்பினராக” மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளில் இதுவரை இல்லாத இத்தகைய புதிய அந்தஸ்து குறித்துப் பல உறுப்பு நாடுகளும் அரசியல்வாதிகளும் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக, ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் “இணை உறுப்பினர்” என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்குத் தீவிர எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே தற்போதைய வரைவு அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உச்சிமாநாடு நிறைவடையும் வரை இந்த வரைவு அறிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), ‘இருதரப்பு உறவின் பெயரோ அல்லது சொற்றொடர்களோ முக்கியமல்ல, இதனால் கனடா மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளே முதன்மையானவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடா அதிக சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடாக மாறுவதற்கும், மக்கள் தங்களின் விருப்பப்படி வாழ்வதற்கும் இந்த உறவுமுறை எந்தளவுக்குப் பங்களிக்கிறது என்பதே முக்கியமானது என்றும் பிரதமர் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments