Monday, June 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உக்ரைன் மீதான ரஸ்யாவின் மிகபெரும் வான் தாக்குதலின் பின்னர் டிரம்ப் கருத்து

உக்ரைன் மீதான ரஸ்யாவின் மிகபெரும் வான் தாக்குதலின் பின்னர் டிரம்ப் கருத்து

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பைத்தியம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஸ்யா மிக உக்கிரமான வான்தாக்குதலை மேற்கொண்டதை தொடர்ந்தே டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஸ்யா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.போர்க்கைதிகள் பரிமாற்றம் மற்றும் யுத்த நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முயற்சிகளிற்கு மத்தியில் இது இடம்பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் தனது சமூக ஊடகபதிவில் புட்டினை கடுமையாக கண்டித்துள்ள டிரம்ப் எனக்கு ரஸ்ய ஜனாதிபதியுடன் எப்போதும் சிறந்த உறவை பேணிவந்துள்ளேன்,ஆனால் அவருக்கு எதோ நடந்துவிட்டது அவர் பைத்தியமாகிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் முழுவதையும் கைப்பற்றுவதற்கு புட்டின் விரும்பினால் அது ரஸ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments