2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் குழு எப் பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து இ ஜப்பான் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 2வது பாதியில் 50வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வென் டிஜக் கோல் அடித்தார்.
இதையடுத்துஇ ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டொ நாக்முரா கோல் அடித்தார்.
இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளியில் சமநிலையில் இருந்தன.
இதையடுத்துஇ ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கிரைசென்சியொ சம்மர்வெலி கோல் அடித்தார்.
இதனால்இ 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
அதனை தொடர்ந்து ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் 88வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைசி கமடா கோல் அடித்தார்.
இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றதுடன்இ ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.


