Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் 6 கதாநாயகிகள்?

அல்லு அர்ஜுன் – அட்லி படத்தில் 6 கதாநாயகிகள்?

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் 6 கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா – 2 படத்திற்குப் பின் இயக்குநர் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

படத்தின் கதை விஎஃப்எக்ஸ் காட்சிகளால் நிறைந்துள்ளதால் ஹாலிவுட்டின் பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனங்களிடம் அதற்கான பணிகளை அட்லி ஒப்படைத்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் 6 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், சமந்தா பெயர்களுடன் பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, ஊர்வசி ரௌத்தலா, ஜான்வி கபூர், வாமிகா கபி என ஒரு டஜன் நடிகைகளிடம் இயக்குநர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம்.

ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் என்றாலே யாருக்கு கூடுதல் காட்சிகள் இருக்கும் என இயக்குநரை ஒருவழி செய்துவிடுவார்கள். இப்படத்தில் 6 நாயகிகள் என்கிற தகவல் சினிமா வட்டாரத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments