Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்தெகிடி இயக்குநருடன் மீண்டும் இணையும் அசோக் செல்வன்!

தெகிடி இயக்குநருடன் மீண்டும் இணையும் அசோக் செல்வன்!

தெகிடி இயக்குநர் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் அறிமுகமானவர், ‘பிட்சா – 2 ‘ மூலம் நாயகன் ஆனார்.

அப்படம் பெரிதாகக் கவனம் பெறவில்லை என்றாலும் அடுத்ததாக, ‘தெகிடி’ என்கிற கிரைம் திரில்லர் படத்தில் நாயகனாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். பி. ரமேஷ் இயக்கத்தில் உருவான இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து, ’கூட்டத்தில் ஒருவன்’, ‘ஓ மை கடவுளே’ படங்கள் வழியாகத் தன்னை நடிகனாக அசோக் செல்வன் நிலைநிறுத்திக்கொண்டார்.

ஆனால், தெகிடி படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்தும் அப்பட இயக்குநர் ரமேஷ் அடுத்தபடம் இயக்காமல் இருக்கிறார். தெகிடி படத்தை முடித்ததும் அவர் மீண்டும் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அசோக் செல்வன் – ரமேஷ் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கிரைம் திரில்லர் பின்னணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments