Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிரித்தானியாவில் 19°C; இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

பிரித்தானியாவில் 19°C; இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் இன்று வசந்தகால சூரிய ஒளி மற்றும் மிதமான வெப்பநிலையுடன் 2026-ஆம் ஆண்டின் வெப்பமான நாள் பதிவாகியுள்ளது.

அதன்படி, லண்டனின் கியூ கார்டன்ஸ் பகுதியில் கடந்த பிப்ரவரி இறுதியில் பதிவான 18.7°C வெப்பநிலையை முறியடித்து, இன்றைய தினம் 19°C அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையுடன் 2026-ஆம் ஆண்டின் இதுவரையிலான வெப்பமான நாளாக அமையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலிருந்து வீசும் தெற்குக் காற்று இதற்குக் காரணமாக உள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இன்று காலை நிலவிய மூடுபனி மற்றும் மேகமூட்டம் விலகி, பிரகாசமான சூரிய ஒளி நிலவியது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் 19°C வெப்பநிலையும், ஏனைய பகுதிகளில் 16-17°C வெப்பநிலையும் நிலவுகிறது.

ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெப்பநிலை 10-13°C ஆகக் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை வெப்பநிலை திடீரென வீழ்ச்சியடையும் எனவும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மேகமூட்டம் அதிகரித்து 8-11°C ஆக வெப்பநிலை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை உயர்வால் தற்போது காற்றில் மர மகரந்தத் துகள்களின் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் ‘ஹே ஃபீவர்’ (Hay fever) எனப்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்கள் அரிப்பு, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

காலநிலை மாற்றம் காரணமாக மகரந்தக் காலம் தற்போது நீண்டுகொண்டே செல்வதாக மெட் ஆபீஸ் (Met Office) அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments