Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் சிக்கி வரும் திடீர் பணக்காரர்கள்:

யாழில் சிக்கி வரும் திடீர் பணக்காரர்கள்:

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (27) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 11 பேர் மட்டும் அல்லாமல் மேலும் பலருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பொதுமக்களிட.ம் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்கள், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments