Tuesday, October 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களுக்கும் அநுராதபுர மாவட்டத்திற்கும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக இன்று (20) மாலை முதல் நாடு முழுவதும் மழை உடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கை மையத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (21) பிற்பகல் 3.30 மணி வரை செல்லுபடியாகும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments