புத்தளம் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து கைவிலங்குடன் கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார்.
இந்தக் கைதி, நேற்றுமுன்தினம் (25) காலை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினரால் அழைத்து வரப்பட்டபோது தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வீடுகளை உடைக்கும் உபகரணங்களுடன் வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைய முற்பட்டபோது, இந்த நபர் காவல்துறையினரால் முன்னதாக கைது செய்யப்பட்டார்.
தப்பிச் சென்றவர் தலவத்துகொட பகுதியை சேர்ந்த40 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைவிலங்குடன் தப்பிச் சென்ற இந்தக் கைதியைப் பிடிப்பதற்கான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


