Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சுமார் 80,000 ரூபா குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 17 ஆம் திகதி அன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 379,200 ரூபாவாக இருந்தது.

இதற்கிடையில், ஒக்டோபர் 17 ஆம் திகதி 410,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் தங்கம் இன்று 322,000 ரூபாவாக ஆகக் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments