Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்போக்குவரத்துக்கான உடனடி அபராதம் செலுத்தும் முறைமை விரைவில்

போக்குவரத்துக்கான உடனடி அபராதம் செலுத்தும் முறைமை விரைவில்

போக்குவரத்துக்கான உடனடி அபராதம் செலுத்தும் முறைமை (Spot Fine Payment System) எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அரச சேவை டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு இலகுவான வசதியை ஏற்படுத்தும்.

Govpay ஊடாக இந்த உடனடி அபராதம் செலுத்தும் முறைமை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இந்த முறைமை மேல் மாகாணம், தென் மாகாணம், அதிவேக வீதி மற்றும் வட மாகாணம் ஆகியவற்றில் அமல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை திணைக்களம் உட்பட அனைத்து அரச திணைக்களங்களிலும் முழு அரச சேவையிலும் டிஜிட்டல் மாற்றம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments