Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை அனர்த்தத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை அனர்த்தத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 355 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 88 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், பதுளை மாவட்டத்தில் 71 பேரும், குருணாகலில் 37 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 62 பேரும், பதுளையில் 53 பேரும் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, 25 மாவட்டங்களில் 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் 1,529 பாதுகாப்பு தங்குமிடங்களில், 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 209,568 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments