Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வவுனியாவில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியாவில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சம்பவத்தில் இ.சிந்துஜா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட மையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப் படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments