Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முல்லைத்தீவு முள்ளியவளை முகாமில் இராணுவ வீரர் பலி!

முல்லைத்தீவு முள்ளியவளை முகாமில் இராணுவ வீரர் பலி!

முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த இராணுவ வீரரும், காயமடைந்த 3 இராணுவ வீரர்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த வீரர்கள் மூவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments