Sunday, June 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனக் கடிதம்;

அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனக் கடிதம்;

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை (30) முற்பகல் 9:30 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் ந. திருலிங்கநாதன்
தலைமையில் இடம்பெற்றது.

உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமை உரையினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந. திருலிங்கநாதன் நிகழ்தினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து கொண்டு, சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்ததுடன் கருத்துக்களையும் வழங்கினார்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 35 பேருக்கான
நியமனக் கடிதங்கள் இந்நிகழ்வின் போது வழங்கிவைக்கபட்டன.

வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்குடன் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனம் பெற்ற குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments