Monday, June 15, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு

50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு

தெலுங்கு திரையுலகில் கடந்த 25 வருடங்களாக நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் வெங்கட்ராஜ் என்கிற பிஷ் வெங்கட். சமீபகாலமாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் பிரபாஸின் உதவியாளர், நடிகர் பிஷ் வெங்கட்டின் மகளை தொடர்பு கொண்டு இந்த சிகிச்சைக்கான செலவை பிரபாசே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார் என ஒரு செய்தி வெளியானது..

ஆனால் தற்போது அந்த செய்தி உண்மையல்ல என்றும், இதுவரை யாரும் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்றும் பிஷ் வெங்கட்டின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். பலர் போன் செய்து விசாரிப்பதாகவும் அதில் ஒருவர் பேசும்போது தான் இப்படி நடிகர் பிரபாஸ் சிகிச்சைக்கு தேவையான பணத்தை தந்து உதவி செய்வார் என்று கூறியதாகவும், பின்னர் தான் பேசியவர் பிரபாஸின் உதவியாளர் இல்லை என்றும் தெரியவந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் இந்த தகவல் பிரபாஸுக்கு இதுவரை தெரிந்திருக்குமா என்று கூட எங்களுக்கு தெரியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் இளம் நடிகர் விஸ்வாக் சென் இது பற்றி கேள்விப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்ச பணம் கொடுத்ததாகவும் பிஷ் வெங்கட்டின் குடும்பத்தினர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments