Monday, March 16, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வனாத்தவில்லு பிரதேச சபையின் ஆரம்ப அமர்வுக்கு இடைக்கால தடை உத்தரவு

வனாத்தவில்லு பிரதேச சபையின் ஆரம்ப அமர்வுக்கு இடைக்கால தடை உத்தரவு

வனாத்தவில்லு பிரதேச சபையின் முதலாவது கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை (24) ஆரம்பமாகவிருந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (23) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த பிரதேச சபைக்குப் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் முக்கிய உறுப்பினர் சமந்த முனசிங்க தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும், வழக்கை ஜூலை மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments