Monday, July 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்82,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்: 61 பேர் மரணம்

82,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்: 61 பேர் மரணம்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று வரை மொத்தம் 82,011 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதில் ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 47 பேர் பெண்கள் எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலை செல்லும் வயதுடைய 6 சிறுவர்களும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments