ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது. இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் பூஜைவிழா சில வாரங்களுக்கு முன் நடைப்பெற்றது. படப்பிடிப்பு பணிகள் வரும் மே 30 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மேலும் ராதிகா மற்றும் ரவீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் ரசிகனான வெங்கி அட்லூரி எம்மாதிரியான கதையை இயக்கவுள்ளார் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
வெங்கி அட்லூரியின் சூர்யா 46 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on