Wednesday, September 9, 2026
spot_img
HomeUncategorizedபல்கலை விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

பல்கலை விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்

பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09) நாடளாவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments