Monday, June 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாகிஸ்தானில் திடீர் 4.2 அளவுகோலில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திடீர் 4.2 அளவுகோலில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.60 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.89 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, இன்று காலை பாகிஸ்தானை சுற்றியுள்ள தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments