கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் 3 ‘ஏ’ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 3 ‘ஏ’ சித்திகளைப் பெற்றது மாத்திரமின்றி அகில இலங்கை ரதீயில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களையும், மாவட்ட மட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.
யாழ். கொக்குவில் தலையாழி வைரவர்கோவிலடியைச் சேர்ந்த ஜமுனாநந்தா பிரணவன் மற்றும் ஜமுனாநந்தா சரணவனன் ஆகியோரே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனாநந்தாவின் புதல்வர்களான இவர்கள் யாழ் இந்து கல்லூரி மாணவர்களுமாவர்.
யாழ் இந்து கல்லூரியில் இம்முறை 55 மாணவர்கள் ‘3ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர். அதேவேளை 33 மாணவர்கள் ‘2ஏ’ சித்திகளைகளையும், 18 மாணவர்கள் ‘1ஏ’ மற்றும் ‘2பீ’ சித்திகளையும் பெற்றுள்ளனர். பௌதீக விஞ்ஞானப்பிரிவிலேயே அதிகளவான மாணவர்கள் ‘3ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அதற்கமைய பௌதீக விஞ்ஞானப்பிரிவில் 27 மாணவர்கள் ‘3ஏ’ சித்திகளையும், 15 மாணவர்கள் ‘2ஏ’ சித்திகளையும், 11 மாணவர்கள் ‘1ஏ’ ‘2பீ’ சித்திகளையும் பெற்றுள்ளனளர். உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 22 மாணவர்கள் ‘3ஏ’ சித்திகளையும், 13 மாணவர்கள் ‘2ஏ’ சித்திகளையும், 5 மாணவர்கள் ‘1ஏ’ ‘2பீ’ சித்திகளையும் பெற்றுள்ளனளர்.
வணிகப்பிரிவில் ஒருவர் ‘3ஏ’ சித்திகளையும், இருவர் ‘2ஏ’ சித்திகளையும், இருவர் ‘1ஏ’, ‘2பீ’ சித்திகளையும் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் இருவர் ‘2ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர். ஏனைய பிரிவுகளில் ஐவர் ‘3ஏ’ சித்திகளையும், ஒருவர் ‘2ஏ’ சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.