கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நெவில் சில்வா இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை – வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நெவில் சில்வா உள்ளிட்ட 9 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.