இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரின் இசையில் இந்தாண்டு காதலிக்க நேரமில்லை, சாவா படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.தற்போது, ஏ.ஆர்.ரகுமான் இசையில் 10க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் சிவப்பு நிறத்திலான மஹிந்திராவின் எக்ஸ்யுவி9இ என்ற புதிய ரக எலெக்ட்ரிக் காரை விலைக்கு வாங்கியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில், “இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த எலெக்ட்ரிக் காரை வாங்கிவிட்டேன். இந்தக் காருக்கென பிரத்யேகமான சப்தத்தை உருவாக்கியுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் ஆட்மோஸ் எனக் குறிப்பிட்டு இந்தக் காருக்கான பிரத்யேக சப்தத்தை உருவாக்கியதற்காக விலை கொடுக்கப்பட்டது எனவும் பதிவிட்டுள்ளார்.இந்தக் காரானது ரூ.21 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.