கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி நகரில் கரிம்பனகடாவ் என்ற இடத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மது வாங்குவதற்காக பலர் வரிசையில் சென்றனர். அப்போது இரவு 8 மணியளவில் கடையில் வரிசையில் நின்றவர்களில் 10 வயது சிறுமியும் இருந்துள்ளார்.
இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். வரிசையில் நின்றவர்கள் அந்த சிறுமியிடம் உடனே வெளியே செல்லும்படி கூறினர். ஆனால், சிறுமியோ அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். அந்த வரிசையில் பின்னால் நின்ற நபர் ஒருவர், அவருடைய செல்போனில் படம் பிடித்து வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதனை தொடர்ந்து, தீர்த்தலா போலீசார் இந்த சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மகளை மதுபானம் வாங்க அந்த சிறுமியின் தந்தையே கடைக்கு அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரிப்பதற்காக அந்த தந்தைக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சிறுமி, ஏதோ மளிகை பொருள் வாங்க கடைக்கு வந்ததுபோல் மதுபானம் வாங்க வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.