Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ பட வெளியீடு பதிவேற்றம்

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ பட வெளியீடு பதிவேற்றம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுகட்ட பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரங்கள் படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த பதிவேற்றம் கிடைத்துள்ளது. அதாவது, எல்.ஐ.கே படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments