Saturday, April 19, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக நான் தயார் - ரணில்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக நான் தயார் – ரணில்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆஜராகுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை (10) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க பல விடயங்களை அறிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments