Tuesday, April 8, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஊர்காவற்துறை மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

ஊர்காவற்துறை மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

நீண்டநாள் கனவாக இருந்துவந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு மக்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு ஜே/52 கிராம சேவகர் பிரிவில் வாழும் மக்கள் தமது அடிப்படை தேவையான குடிநீர் இன்றி நீண்டகாலமாக பெரும் அசௌகரியங்களை சந்தித்துவந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதி மக்கள் கடந்த வருடம் கட்சியின் பிரதேச நிர்வாகத்தினர் ஊடாக குறித்த விடயத்தை முன்னாள் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்தக்கு கொண்டுசென்றிருந்தனர்.

மக்களின் அவசிய தேவைகருதி குடிநீருக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு துறைசார் அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை முன்னெடுத்திருந்தார். அதனடிப்படையில் குழாய் வழி மூலமான குடிநீர் குறித்த பகுதிக்கு வழங்கப்பட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் 5ம் திகதி சனிக்கிழமை அன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களின் நலன்கள் கறித்து கலந்துரையாடியதுடன் குறித்த குடிநீர் வழங்கலையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments