Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல்

கொழும்பில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல்

கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோக் வீதியில் பஸ் மோதி உயிரிழந்த நபரொருவரை அடையாளம் காண்பதற்கு கோட்டை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்த விபத்து கடந்த பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

45 முதல் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரமுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கோட்டை பொலிஸ் நிலையத்தின் 071 8591555 அல்லது 011 2323677 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments