இவ்வருடம் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. முதல் மூன்று மாதங்களில் 565 விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதோடு, 292 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹபுகொடை தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான விபத்துக்களில் 15 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் சிக்குவதாகவும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரிக்கலாம்.
குறிப்பாக எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொது மக்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஆண்டுதோறும் 1.3 மில்லியன் மக்கள் வீதி விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், 6 பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாகவும், 12,000 பேர் உயிரிழப்பதாகவும் தொற்றா நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் மேலும் விபத்துகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.