Wednesday, April 2, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஜோகோவிச்சை வீழ்த்தி மியாமி ஓபனை வென்ற ஜேக்கப்!

ஜோகோவிச்சை வீழ்த்தி மியாமி ஓபனை வென்ற ஜேக்கப்!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி செக். குடியரசின் ஜேக்கப் மென்ஸிக் முதல் முறையாகப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும் – செக். குடியரசின் டீன் ஏஜ் வீரா் ஜேக்கப் மென்ஸிக்கும் மோதினா்.

டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை 99 பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் 100-ஆவது பட்டத்தை வெல்வாரா என எதிா்பாா்ப்பு எழுந்தது.

அமெரிக்காவின் மியாமி காா்டன்ஸ் மைதானத்தில் ஏடிபி மாஸ்டா் 1000 ஆடவா் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் டிமிட்ரோவை வீழ்த்தி 37 வயதில் ஏடிபி மாஸ்டா் 1000 போட்டி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற முதிய வீரா் என்ற சிறப்பையும் ஜோகோவிச் பெற்றார். மற்றொரு அரையிறுதியில் செக். குடியரசின் இளம் வீரா் ஜேக்குப் மென்ஸிக் கடும் போராட்டத்துக்குப்பின் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

மியாமி ஓபனில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பெய்த மழை, ஜோகோவின் கண்ணில் நோய்த் தொற்று உள்ளிட்ட சில காரணங்களால் ஆட்டம் 5 ½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இது ஜோகோவிச்சுக்கு சவாலாக அமைந்தாலும், அவருக்கு உண்மையான சவாலாக இருந்தது மென்ஸிக்தான்.

24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச்சுக்கு கண் நோய்ப் பாதிப்பு மட்டுமே மிகவும் பின்னடைவாக அமைந்தது. போட்டித் தொடங்கியதும் மென்ஸின் 3-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றார். அதன்பின்னர் அவருக்கு நெருக்கடி கொடுத்த ஜோகோ 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். பின்னர் 4-4 என்று ஆன நிலையில் முடிவில் 6-5 என்று மென்ஸின் முடிவில் முன்னிலை பெற்றார்.

2 மணிநேரம் 3 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மென்ஸிக் இரண்டு டைபிரேக்கர்களிலும் 7-6 (4), 7-6 (4) என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக மியாமி ஓபன் ஏடிபி பட்டத்தைத் தனதாக்கினார்.

19 வயதான மென்ஸிக்கின் வேகத்திற்கு ஜோகோவிச்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. 100-வது பட்டத்துக்கான கனவு தகர்ந்து போய்யுள்ளது.

ஜோகோவிச்சுக்கு முன்னதாக, ஜிம்மி கானா்ஸ்(109), ரோஜா் பெடரா் (103) ஆகியோா் 100-க்கும் அதிகமான பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments