Sunday, March 15, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது – நடிகர் சித்தார்த்

கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது – நடிகர் சித்தார்த்

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து சஷிகாந்த் இயக்கிய ‘டெஸ்ட்’ படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதுகுறித்து சித்தார்த் கூறும்போது, “நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி பலரும் அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட் வீரராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட் வீரர்களில் ராகுல் டிராவிட் பிடிக்கும்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments