Friday, November 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டம் – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டம் – அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற போதிலும், தமது பொருளாதார நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உயர் பதவியினருக்கு சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், 2027 வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, நிபந்தனையற்ற 25,000 ரூபாய் வாழ்க்கைச் செலவுப் படியை உடனடியாக வழங்குமாறு கோரி, வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

தொழில் உரிமைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments