Friday, November 27, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பள்ளிகளுக்கு விடுமுறை!

பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 26) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பாடசாலை வளாகங்களிலும் நீர் தேங்கியுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments