Sunday, November 22, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மத்திய பெருவின் எண்டீஸ் மலைப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2026) 6.9 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, உள்ளூர் நேரப்படி இரவு 7:09 மணிக்கு (சனிக்கிழமை அதிகாலை 00:09 GMT) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜூனின்  நகருக்கு வடக்கே 34 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எண்டீஸ் மலைப்பகுதியில், பூமிக்கு அடியில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

பெரு நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லிமாவிலும்  இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள எரிமலைகள் மற்றும் புவித்தட்டுப் பிளவுகளைக் கொண்ட ‘நெருப்பு வளையம்’ எனப்படும் பகுதியில் பெரு நாடு அமைந்துள்ளது. உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பெருவின் ஆண்டீஸ் பகுதியில் ஏற்பட்ட 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருவர் காயமடைந்ததோடு, பல வீடுகள், சுகாதார நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் சேதமடைந்தன. அதேபோல், ஜூலை மாதம் ஜூனின் பிராந்தியத்தில் ஏற்பட்ட 5.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments