ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பல், கடல் கண்ணிவெடியில் மோதியதில் இன்று(21) தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
அந்த கப்பல் எச்சரிக்கைகளையும் மீறி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகவும், தனது அடையாளம் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளை (identification and navigation systems) அணைத்து வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நண்பகலுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது.
“தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளும் பயணம் செய்வது கப்பல் பணியாளர்களின் உயிருக்கும், கப்பல்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை கப்பல் உரிமையாளர்களுக்கும் இயக்குபவர்களுக்கும் எச்சரிக்கிறோம்” என்று ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது


