Sunday, November 22, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தாக்குதல் இல்லை என்ற உத்தரவாதம் அவசியம்!

தாக்குதல் இல்லை என்ற உத்தரவாதம் அவசியம்!

தற்போதைய மோதல் நிலை அல்லது நிலவும் தடைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்திற்காக மாத்திரம் அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட ஈரான் தயாராக இல்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையில் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மூலமும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெடுக்கும் தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments