Friday, November 20, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி - முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 243/5

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 243/5

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று(10) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஹென்றி நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி 113 ஓட்டங்கள் பெற்று சதத்தைப் பதிவு செய்தார். கிளென் பிலிப்ஸ் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இந்திய அணியின் பந்து வீச்சு சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments